St Our Ceylon News: வலம்புரி கவிதா வட்டத்தின் 47 வது கவியரங்கம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

புதன், 18 ஏப்ரல், 2018

வலம்புரி கவிதா வட்டத்தின் 47 வது கவியரங்கம்

உலக கவிதை தின அரங்கில்    வலம்புரி கவிதா வட்டத்தின் 47 வது கவியரங்கம் 

31/3/2018 அன்று வலம்புரி கவிதா வட்டத்தின் 47 வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.  உலக கவிதை தினஅரங்காக நடைபெற்ற நிகழ்வுக்கு தலைவர் என்நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார்
பிரதம அதிதியாக  ஓய்வு பெற்ற  மத்திய   மாகாண கல்விப் பணிப்பாளர் வீ .எஸ்.  இதயராஜா அவர்கள் கலந்து கொண்டார்.  சிறப்பதியாகசிவஸ்ரீ கே.வைதீஸ்வர குருக்கள் கலந்து கொண்டார்.

காலஞ்சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை முன்னாள் பணிப்பாளர் திருதிருஞானசுந்தரம் அவர்கள்நினைவுக்கூரப்பட்டார்.

உலக கவிதை தினம் பற்றி கவிஞர் ஈழகணேஷ்டாக்டர் தாசிம் அகமது,  கவிஞர் மேமன்கவி ஆகியோர் உரையாற்றினார்.

விசேட அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் கல்விப் பணிப்பாளரும் நானும் எனது தேவதையும் கவிதை நூலின் ஆசிரியருமானவீ.எஸ்தியாகராஜா அவர்கள் தனதுரையில்கரும்பு தின்ன கூலியா என்பார்கள்அதனைப்போல் என்னை மிகச் சிறப்பான நிகழ்வுக்குஅழைத்திருக்கிறீர்கள்கவிதாயினி சுபாஷினி இக் கவியரங்கில் மரபுச் சுவைச் சொட்ட மிக அழகாக இக் கவியரங்கை நடத்திச் சென்றார்வாழ்த்துகள்உலகம் எங்கும் கவிதைகள் விரிந்துள்ளனஆங்கிலபிரென்ச்உர்துஜேர்மனிய என்று எல்லா மொழிகளிலும் கவிதைகள்இருக்கின்றனஇக் கவிதைகளின் போக்குகளிலிருந்து தமிழ் கவிதைகளின் போக்குகள் மாறுபற்றிக்கின்றன என்று சொல்ல முடியாதுகவிதைகள் தம்மை சூழவுள்ள நடப்புகளையே பிரதிபலிப்பவைகளாக அமைகின்றன.  

எமது நாட்டைப் பொறுத்தவரை நான் தருமு சிவராமு  என்கின்ற பிரமிள் , சோலைக்கிளி போன்றவர்களை மிகவும் ரசித்திருக்கின்றேன்.அமெரிக்க கவிஞன் வோல்ட் விட்மன் புல்லின் நுனிகள்கவிதையை 36 வருடம் திருத்தி எழுதியிருக்கிறார்

1800 ம் ஆண்டு எழுதப்பட்ட  அமெரிக்கா எங்கே போகிறது என்ற அவரது கவிதை இன்றும்சிலாகித்துப் பேசப்படுகிறதுமிக பிரபலமான ஆபிரிக்கக் கவிதை ஒன்றுஎங்கள் கைகளில் நிலங்கள் இருந்தனஅவர்கள் கைகளில் பைபிள்இருந்ததுஅவர்களின் வேண்டுகோளின்படி கண்ணை மூடி பிரார்த்தித்தோம்கண்ணைத் திறந்து   பார்த்தபோது எங்கள் கைகளில் பைபிள்இருந்தது அவர்கள் கைகளில் நிலங்கள் இருந்தன.

எனக்கு பிடித்த நைஜீரிய கவிதை முன்னொரு காலத்திலே நெஞ்சத்தினாலே சிரித்து  வந்தார் , இப்போது பற்களாலேயே சிரிக்கிறார்கள்...... என்ற கவிதையும் இன்று எங்களுக்கும் பொருத்தமான கவிதைஎன்று மிகவும்ஆழமாகவும் சுவையாகவும்  உரையாற்றினார்.  
கவிதாயினி சுபாஷினி பிரணவன் 47 வது கவியரங்கிற்கு தலைமை தாங்கினார்.  கவிஞர்கள் வதிரி சிரவீந்திரன்எம்பிரேம்ராஜ்,  எஸ்.  தனபாலன்,  கிண்ணியா அமீர் அலிஎம்எஸ்.தாஜ்மஹான்,        மஸீதா அன்சார்எம்.  பாலகிருஷ்ணன்,  கவிக்கமல் ரஸீம்சுலோச்சனாசண்முகநாதன்,  தேஜஸ்வினி பிரணவன்கம்மல்துறை இக்பால்,   பேருவளை இம்லாஸ் முஹம்மத்அப்துல் லத்தீப்,  வெளிமடை ஜஹாங்கீர்,  உடுகொடை யஹ்யா  அய்யாஷ் , ஆயிஷா சித்திக்கா,  பாணந்துறை நிஸ்வான்பேருவளை பரீஹாபாரூக்,  ராஹிலா ஹலாம்வெலிப்பன்னை அத்தாஸ் ஆகியோர் கவிதை பாடினர்.

சத்திய எழுத்தாளர் எஸ்நாகூர் கனிகொக்குவில் கே.எஸ்.சிவஞானராஜாஎழுத்தாளர் .எஸ்.எம்நவாஸ்.எம்.எஸ்.உதுமான்,மலாய்கவி டிவங்சோநூருல் அயின் நஜ்முல் ஹுசைன்பாத்திமா மைந்தன் அன்சார்எம்.எம்.ரூமி போன்றோர் சபையைஅலங்கரித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக