ஆணமடுவவையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீப்பிடித்துள்ளதனால் அந்த ஹோட்டல் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
அந்த ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸார் காவலில் நிறுத்தப்பட்டிருந்தபோதும், தீப்பிடிக்கும் நேரம் பொலிஸார் அவ்விடத்தில் கடமையில் இருக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
இவ்விடயம் காரணமாக ஆணமடுவவில் பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாசகார நபரொருவர் அல்லது ஒரு கும்பலினால் இந்தத் தீ மூட்டப்பட்டிருக்கலாம் எனவும், இது இனவாதச் செயலாக இருக்க முடியாது எனவும் அவ்விடத்திற்குச் சமுகம்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்க பண்டார மற்றும் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக