காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதியுள்ள “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்” எனும் காப்பிய நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 24 ஆம் திகதி, சென்னை வெஸ்டின் பார்க் ஹோட்டலில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்திய இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர், பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி
தலைதாங்குவார்.இந்திய இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர், பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி
இறையன்பன் குத்தூஸ் இறைவாழ்த்துத் தெரிவிக்க, வரவேற்புரையை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவருமான எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
நூல் கொடை நாயகரும், அறிவியல் அறிஞருமான எம்.ஜே. முஹம்மது இக்பால் அறிமுகவுரை நிகழ்த்துவார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர், பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் நூலினை வெளியிட்டு வைப்பார்.
காப்பிய நூலின் முதற்பிரதியை, பேராசிரியர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனர் பெற்றுக் கொள்வார்.
துறைசார் அறிஞர்களான எச்.எம் ஜவாஹிருல்லாஹ், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா. தேங்கை ஷரபுத்தீன், எம். ஷதீதுத்தீன் அப்துர் ரவூப், மர்ஷூம் மௌலானா, நியாஸ் ஏ. ஸமத், எம்.ஜே. அப்துர் ரவூப், ப. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

நிகழ்ச்சியை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ம.இ. முஹம்மது மரிக்கார் தொகுத்து வழங்குவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக