நடைபெற்று முடிந்த க.பொ.த (உ.த) பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தென் மாகாணம் - மாத்தறை மாவட்டம் மூன்று முதலிடங்களைச் சுவீகரித்துக் கொண்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி, திலுனி சந்துனிக்கா
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் இடத்தை, மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவி பாரமி பிரசாதி சத்னசினி ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.
அகில இலங்கையில் கணித பாடப் பிரிவில், முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் பெற்றுள்ளமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக