பண்டுதொட்டு
ஈழத்தின் பூர்விக உரிமையை கொண்ட ஈழத்தமிழர் காலங்காலமாக சூழ்ச்சி காரணமாகவும், துரோகம்
காரணமாகவும், விலைபோகும்தன்மை காரணமாகவும்
தமது உரிமத்தை இழந்து வந்தமை கண்கூடு.
ஒவ்வொரு இழப்பின் ஏமாற்றத்தின் போதும் பல்வேறு
சாட்டுப்போக்குகளை கூறி தம்மையும், தம்சார்ந்தவர்களையும்
சமாதானம் செய்து வந்துள்ளனர். இதுதான் வாழையடி வாழையாக தொடர்ந்து வரும்
தமிழ்மக்களின் சாபக்கேடு.
அவ்வகையில் இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலைகள்
தமிழ்த்தேசியத்திற் கு சாவுமணி அடிக்கும் நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
தமிழ்காங்கிரஸ், தமிழரசு
என்ற நிலை ஐக்கியத்திற்கு அடிகோலாது என்று கண்டு கொண்ட
தந்தைசெல்வா மலையக மக்களையும் ஒருங்கிணைத்து 1972 இல்
தமிழர் விடுதலைக்கூட்டணியை
தோற்றுவித்தார்.
ஒருகட்சி ஒருகூட்டமைப்பாக பரிணமிக்கும் போது அக்கட்சி
உறங்குநிலைக்கு செல்வது தான்நியதி. தமிழர்விடுதலைக் கூட்டணி
உதயமாகும்போது தமிழரசு கட்சியின் செயல்நிலை முடிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்பின் நடைபெற்ற தேர்தலில் பலமான அங்கீகாரத்தை மக்கள், தமிழர்
விடு தலைக் கூட்டணிக்கு
வழங்கி முதன்முறையாக இலங்கை அரசியலில் ஒரு சிறு பான்மைக்கட்சியை
எதிர்க்கட்சியாக்கினர்.
பின்னர் ஈழத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றஅசாதாரண
சூழ்நிலைகளில் தமிழ் புத்திஜீவிகளின்மரணிப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியை
பலவீனப்படுத்தி தமிழ் புத்திஜீவிகளின் அரசியல் பிரவேசத்தை இல்லாதொழித்தது.
ஒரு நாட்டின் விடுதலையில் அரசியல் போராட்டம், ஆயுத
போராட்டம் என்பன ஒரே இலக்கில் பயணிக்க முடியுமே தவிர ஒரே பாதையில் பயணிக்க
முடியாது. அவ்வாறு பயணிக்க முற்பட்டதன் விளைவே ஈழத்தில் நடந்த துன்பகரமான
நிகழ்வுகளும், தற்போதைய தகுதியற்ற அரசியல் தலைமைகளும், என்பது
எவரா லும்
எளிதில் மறுத்துவிட முடியாது.
2000ம் ஆண்டுக்குப்பின்னரான அரசியல்
பாதையில் ஆயுதப்போராட்டங்களில் ஈடுபட்ட குழுவினரையும் இணைக்கும் செயற்பாடுகள்
நடந்தேறின. தமித்தேசியக் கூட்டமைப்பு என்ற நாமம் தோற்றம் பெற்றது. இது
விடுதலைப்புலிகளின் வழிநடத் தலில் வலுப்பெற்றது.
ஆயினும் தமது கொள்கைக்கு உடன்படாத தலைவர்களை, பிரமுகர்களை
வெளி யேற்றும்
படலமும் விடுதலைப்புலிகளால் கையாளப்பட்டிருந்தது. அதன்காரண மாக
தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் செயற்பாட் டின்
காரணமாக உதயசூரியன்சின்னம் கூட்டமைப்பின்சின்னமாக கையாளப்படுவதில்
ஏற்பட்ட இழுபறிநிலை காரணமாக உறங்கு நிலையில் இருந்த தமிழரசுக் கட்சியின்
சின்னமான வீட்டுசின்னத்திற்கு உயிர்ப்பு கொடுக்க வேண்டிய நிலை
விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது. அந்நிலை இன்று வரை தொடர்கிறது.
விடுதலைப்புலிகள் விட்ட தவறு “கூட்டமைப்பை ஒரு கட்சியாக
பதிவுசெய்யாது, தமிழரசுக்கட்சியின் சர்வாதிகாரப் போக்கிற்கு அடிகோலியது
தான்”.
இதுதான் இன்று பங்காளிக் கட்சிகளை உதாசீனப்படுத்தி தான்
தோன்றித்தனமாக முடிவெடுத்து ஈழத்தமிழ் உறவுகளின் இன படுகொலையை மறைத்து தமிழரின்
அரசியல் அபிலாசைகளை அரசிடம் அடகுவைக்கும் நிலைக்கு தள்ளி விட்டுள்ள துடன்
தனது பங்காளிக்கட்சிகளின் வெளியேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.
தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனம் காரணாமாக
ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து
வெளியேறி தமிழர்விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளது. இந்நிலை
இலங்கைத்தமிழர் அரசியல் நிலையில் புதிய எதிர்பார்ப்புடன் கூடிய அரங்கை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தமிழ்மக்களின் மனதில்
அண்மைக்காலங்களில் கடும் அதிருப்தி நிலையினை ஏற்படுத்தியுள்ளதுடன், பங்காளிக்கட்சிகளின்
கைக்கு மட்டுமல்லாது வாய்க்கும், செயல்நிலைக்கும்
விலங்கிட்டுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் துணிகரமாக இந்நிலையினை உடைத்து மக்களின்
எண்ணலை யினை
புரிந்து காலத்தின் கட்டாயத்தினை புரிந்து வெளியேறியது மட்டுமல்லாது பலமான அரசியல்
தடத்தினை தமிழரசுக்கட்சியை எதிர்த்து பதிக்க வேண்டுமாயின், தந்தை
செல்வாவின் இலட்சியக்கனவில் உதித்த தமிழர் விடுதலைக்கூட்டணி மூலமாகவே முடியும்
என்பதை உணர்ந்து செயற்பட்ட அரசியல் சாணக்கியத்தை பாராட்டியாகவே வேண்டும்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினைப் பொறுத்தவரை அக்கட்சியின்
செயலாளரும் பாராளு மன்ற
உறுப்ப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் செல்வாக்கு வன்னிப்பிரதேசத்தில் பலமாக உள்ளது.
தற்பொழுது ஆயுதக்கட்சிகள் என்று தமிழரசுக்கட்சி செய்யும்
பிரசாரமும், தமிழர் விடுதலைக்கூட்டணி இணைவின்ஊடாக செயலற்று விடும்.
மேலும் பலகட்சிகள்இணைந்து தமது தனித்துவம் இழக்காது
சமபலத்துடன் இயங்கக்கூடிய ஏற்பாடுகள் ஏற்கனவே தந்தை செல்வாவினால் தமிழர் விடுதலைக்
கூட்டணியில் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் இன்னும் பல கட்சிகளை ஒன்றிணைக்க வே
செய்யும்.இது தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனத்திற்கு சாவுமணி அடிப்ப தாகவே
அமையும்.
அது மட்டுமல்ல எல்லாவற்றையும் கண்டும் பதவிமோகம், அல்லது
வெளியே றினால்
தமது செல்வாக்கு உடைந்து விடுமோ? என்ற
சந்தேகத்தில் கைகட்டி மௌனிகளாக இருக்கும் புளொட், டெலோ
ஆகிய கட்சிகளின்எதிர்காலம் ஈ.பி.ஆர் .எல்.எவ், தமிழர்விடுதலைக்கூட்டணிமற்றும்
இணைவுக் கட்சிகளின் செயற்பாட்டிலே தங்கியுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தனித்து இயங்கும் நிலைபாடு
அவரின் அரசியல் சாணக்கியமற்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதோடு அவரின்
நிலைப்பாடும் சுமந்திரன் குழுவினர் போன்ற ஐக்கிய தேசியக்கட்சிக்கு விசுவாசமானதா? அல்லது
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
விசுவாசமானதா? என்ற ஐயப்பாடினையும் ஏற்படுத்தும் என்பதும்
மறுப்பதிற்கில்லை. எதுவாயினும் இந்நிலை அவரின் அவர் சார்ந்த கட்சியின்
விழ்ச்சிக்கு வழிவகுப்பதா கவே அமையும்.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தனது நிலையினை பலமாக
பதித்துக் கொள்வதுடன்ஆ
னந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் அனைத்து நகர்வுகளையும்
பலமாகவும், சட்டரீதியாகவும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவரது செயப்பாடு கடந்த காலங்களில் கட்சியினை மந்த
நிலையில் வைத்துள்ளதுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரைப் போல மக்களின்
எண்ணலையினை நாடிபிடித்து பார்க்கத் தவறி மக்கள் செல்வாக்கை பெறமுடியாத
பிரமுகராகவும் உள்ள நிலை களைந்தெறியப்பட வேண்டும்.
மேலும் தமது பலத்தினை எதிரிக்கு வாரியிறைக்கும்
செயற்பாட்டையும் கைவிட வேண்டும்.அதற்கு தமது அரசியல் முரண்பாட்டை முடிவிற்கு
கொண்டு வரவேண் டும்.
தமது கட்சியின் தலைமைகளை மீண்டும் தம்முடன் இணைத்து பலப்படுத்த
வேண்டும்.அந்த வகையில் வரதராஜப்பெருமாள் அவர்களை தம்முடன் இணைத் துக்
கொள்வதன் ஊடாக தமது கட்சியினைப் பலப்படுத்துவதோடு தமிழருக்கும் புத்திஜீவிகள்
சார்ந்த அரசியல் பிரவேசத்தை மீண்டும் ஏற்படுத்த முடியும்.
இங்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் புகழாரம் செய்வது நோக்கமல்ல.
ஆனால் ஆலை யில்லா
ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரையாம்.. என்ற நிலையில் தமிழரசுக்கட்சியின் தன்னாதிக்கப்
போக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினால் முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ளமை
முக்கிய விடயமே.
மேலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி
செய்யவேண்டியது மக்கள் பிரதிநிதிக ளது கடமை என்பதையும் மறந்து
விடலாகாது.
எனவே எதிர்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு
கற்றதகுதியான, நிபுணத்துவமுடைய, அர்ப்பணிப்புமிக்க
பிரதிநிதிகளை உள்வாங்கி பங்காளிக் கட்சிகளின் சமபலம், தனித்துவம்
பாதிப்புறாவண்ணம் யாப்புகளை அமைத்து பிரிவி னையற்ற நிலையினை
உறுதிப்படுத்துவதுடன் தமிழ்த் தேசியத்தினை பாதுகாத்து மக்கள் நலன் பேண
வேண்டுமென்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
-இரா.ஜயமோகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக