St Our Ceylon News: அட்டாளச்சேனை அந்நூரில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 7 மார்ச், 2017

அட்டாளச்சேனை அந்நூரில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

ட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தில் பெற்றார்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் ஏன் செய்கிறார்கள் எதற்காகச் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத நிலமையில்தான் பெற்றார்கள் கலந்து கொண்டிருக்கிருக்கிறார்கள் என்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் தெரிவித்தார்.


அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை வலயக் கல்வி பணிமனையால் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறி பெற்றாரை ஆர்ப்பாட்டத்தில் இறக்கியவர்கள் யார்..? இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் ..?இதற்கான பின்னணி என்ன? என்பது கேள்வியாக இருக்கிறது.

ஆனால் பாடசாலைகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அதுசம்மந்தமாக அதற்கான உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அல்லது பிரச்சனைகளைக் கேட்டறிய வேண்டும். மாறாக யாரிடமும் விசாரிக்காது கேள்விப்பட்டதை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தல் மாணவர்களின் கல்விக்கு இடைஞ்சலை ஏற்படுத்தல் என்பது கண்டிக்கத்தக்க விடயம்.

இது எந்தவித பிரச்சனைகளும் நடக்காத போது பிரச்சனைகள் நடந்தது போன்று சித்தரித்து மக்கள் முன்னிலையில் பெயர் எடுக்க பொய்களை சொல்லி வீண் வதந்திகளைப் பரப்பி அவர்கள் விரும்பியதை வென்றெடுக்கலாம் என்று செயற்படுகின்றனர். நாங்கள் அரச அதிகாரிகள், அரச நிருவாகம் செய்பவர்கள் அதனை உரிய முறையில் செய்வோம். ஆனால் அரசியல்வாதிகள் தங்களின் இருப்புக்களை நிலைநாட்ட நல்லவற்றை செய்வதை விடுத்து பொய்யான பிரச்சாரங்கள் மூலம் கல்வியில் விளையாட முனைதல் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் தொடர்பில் இப்பாடசாலை அமெரிக்க யுசைட் திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்தின் மூலமும் அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரே பாடசாலைக்கு இரண்டு திட்டங்கள் வழங்குவதில் ஏதும் சிக்கல் வரும் என்ற காரணத்தினால் "ஏ" நிலையில் கிடைக்காவிட்டாலும் "பி" நிலை "சி" நிலை என்று அபிவிருத்திக்காக உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை வித்தியாசமாக மக்களிடம் கூறி பிரச்சனைகளை உண்டாக்கி வலயக் கல்வி பணிப்பாளரை மாற்ற நினைப்போரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைய மக்களிடம் பொய் கூறுவோரின் நிலமைகளையும் மக்கள் அறிந்து செயல்படவேண்டும் என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஷிம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக