St Our Ceylon News: நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வியாழன், 16 மார்ச், 2017

நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை

 – காதர் மஸ்தான்

நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை மாறாகக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியானவுடன் அவர்கள் காணும் மனிதர்களும் சமூகமுமே அவர்களை மாற்றுகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
மன்னார் லா சாலி ஆங்கில பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (15) பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் கே.எஸ்.யோக்ணானந்தன்
தலைமையில் லா சாலி மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; அரசியல் வாழ்க்கை என்றாலே குழப்பம் நிறைந்ததும் மக்களின் தேவைகளால், வேலைப்பளுக்கள் நிறைந்ததுமான வாழ்க்கையாகும். இந்த வாழ்க்கைப்பயணத்தில் இவ்வாறான சிறுவர்களுடைய நிகழ்வுகளே அதன் களைப்பை போக்குகிறது.

தற்போது உலகில் ஒரு தேர்ச்சி பெற்ற மொழியாகவும் பொதுவான மொழியாகவும் ஆங்கிலம் பேசப்படுகிறது. அதனைச் சிறுவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து கற்பித்து அவர்களைச் சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக அனுப்பும் பணியை செய்யும் இந்த லா சாலி பாடசாலைக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நாட்டிலுள்ள எந்தக் கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை மாறாகக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியானவுடன் அவர்கள் காணும் மனிதர்களும் சமூகமுமே அவர்களை மாற்றுகிறது.
மேலும் இந்தப் பாடசாலையில் தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்து மாணவர்களும் கற்கும் கல்விக்கூடமாகக் காணப்படுவதால் எதிர்காலத்தில் தன்னாலான அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கொமர்சல் வங்கியின் முகாமையாளர் தி. திவாகரன் உற்பட அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள், ஆரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக