St Our Ceylon News: மீனவர்களின் மொழி உரிமையைப் பாதுகாத்தார் கிழக்கு முதல்வர்!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 10 மார்ச், 2017

மீனவர்களின் மொழி உரிமையைப் பாதுகாத்தார் கிழக்கு முதல்வர்!

வாழைச்சேனை  மற்றும் ஓட்டமாவடியிலிருந்து  மீனவத் தொழிலில்  ஈடுபடுபவர்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கிய பிரச்சினைக்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால்  தீர்வு வழங்கப்பட்டுள்ளது,

வாழைச்சேனை  மற்றும் ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலிருந்து மீன் பிடிக்காகக்  செல்லும் மீனவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியிலான பத்திரங்களை தினந்தோறும் நிரப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருந்த  நிலையில்  அது குறித்து  மீனவ சமூகத்தால்  கிழக்கு முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழைத்  தாய் மொழியாகக்  கொண்ட தமக்கு வேற்று  மொழிகளிலான பத்திரங்களை தினந்தோறும் நிரப்பிக் கொடுக்க வேண்டியுள்ளமை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாகவும்  இதனால்   தமக்கு ஜீவனோபாயத்தை முன்னெடுப்பதில் பல்வேறு  சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக மீனவர்கள் கிழக்கு முதலமைச்சரிடம்  முறையிட்டனர்.

இதனையடுத்து  கடந்த  மார்ச் 04 ஆம் திகதி   கிழக்கு முதலமைச்சர்  கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை  தொடர்பு கொண்டு  இது குறித்து  கலந்துரையாடியதுடன் பின்னர்  கடற்றொழில் திணைக்களத்துடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக இதன் போது  கிழக்கு முதலமைச்சரிடம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன உறுதியளித்தார்,

இதனடிப்படையில்  தமிழ் படிவங்கள்  தற்போது  வாழைச்சேனை கடற்றொழில்  திணைக்களத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்  ரவீந்திர விஜேகுணரத்ன கிழக்கு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  தினந்தோறும் படிவங்கள்  நிரப்பும் செயன்முறையை  மாதமொரு முறையாக மாற்ற உதவுமாறு   மீனவர்கள் கேட்டிக் கொண்டதற்கிணங்க  அது தொடர்பான நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் மீனவர்களுக்கு சாதகமாகான  பதில் கிடைக்கும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நம்பிக்கை  வௌியிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக