2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட
இந்த முயற்சி, நிதி மற்றும் உடல் ரீதியான சவால்களால் பாடசலைக் கல்வி தடைபட்ட குழந்தைகளிடையே கல்வி ஈடுபாட்டை ஊக்குவிக்க முயல்வதே இதன் நோக்கமாகும்.தகுதிவாய்ந்த மாணவர்கள் மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் ரூ. 5,000 மாதாந்திர உதவித்தொகையைப் பெற முடியும்.
இந்த உதவித்தொகைக்கு தகுதி பெற, மாணவர்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
வருமான நிலை: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 180,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
மருத்துவ நிலை: மாணவர் வைத்தியர் ஒருவரினால் சரிபார்க்கப்பட்ட ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.
சேர்க்கை: மாணவர் தற்போது அரசாங்க பாடசாலையில் அல்லது அரச உதவி பெறும் பாடசாலையில் அல்லது பிரிவேனாவில் சேர்ந்திருக்க வேண்டும்.
இறுதித் திகதி 15.02.2026
நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக