St Our Ceylon News: வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஆளுங்கட்சி உறுப்பினர்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 2 பிப்ரவரி, 2026

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஆளுங்கட்சி உறுப்பினர்

வெலிகம பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியைச் வழக்கறிஞர் சின்தக தர்ஷன ஹேவா பத்திரண தெரிவானார். 22 வாக்குகளைப் பெற்றே அவர் தவிசாளராகத் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

எதிர்க்கட்சியினர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 21

ஆகும். 2 வாக்குகள் நிரகரிக்கப்பட்டுள்ளன. 

வெலிகம பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவு பல முறை பின்போடப்பட்டது. 

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த ஸமகி ஜனபல வேகயவின் லசன்த விக்கிரசேக்கர, 4 மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடாத்திக் கொலை செய்யப்பட்டதை அடுத்தே, அப்பதவி வெற்றிடம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக