St Our Ceylon News: சமுர்த்தி சங்க உப தலைவருடைய காதைக் கடித்த சமுர்த்தி பயனாளி!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

சமுர்த்தி சங்க உப தலைவருடைய காதைக் கடித்த சமுர்த்தி பயனாளி!

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக் காயப்படுத்திய சமுர்த்தி பயனாளி ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் சமுர்த்தி வங்கியால் வழங்கப்படும் கொடுப்பனவு குறித்த
பகுதியில் நேற்று (09) பகிர்ந்தளிக்கும் போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே சந்தேக நபர் , அந்த கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவருடைய காதைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தால் காயமடைந்த உப தலைவர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த உடப்பு பொலிஸார், உப தலைவரின் காதை கடித்து காயப்படுத்தியதாக ௯றப்படும் அதே பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளியான குறித்த நபரை நேற்று (09) சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று வெள்ளிக்கிழமை (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ரஸீன் ரஸ்மின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக