St Our Ceylon News: கோத்தாவை கைதுசெய்யும் முயற்சி நடைபெறுகிறது! - அஜித் பிரசன்ன
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கோத்தாவை கைதுசெய்யும் முயற்சி நடைபெறுகிறது! - அஜித் பிரசன்ன

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேக்கரவினால் கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்துகிறார்.

நேற்று (15) கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய இலங்கை மன்றத்தின் நிருவாக சபை ஒன்றுகூடலின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,

வழக்குகள் பலவற்றுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் கைதுசெய்து, அவர்களை அரச சாட்சியங்களாக்கி கோத்தபாய ராஜபக்ஷவை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் எதிர்வுகூறினார்.

எக்னெலிகொட வழக்குக்காக மட்டும் 12 இராணுவ அதிகாரிகள் பல்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கோத்தபாய ராஜபக்ஷவைத் தான் சிறையில் அடைக்கத் தேவை என சாணி அபேசேக்கர நான்காவது சந்தேகநபரான கோப்ரல் ரூபசேனவின் மனைவியிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டார்.

அதற்காக உங்கள் கணவனை அனுப்பி, 'கோத்தபாய தனக்குக் கட்டளையிட்டார்' என நீதிமன்றில் கூறுமாறு சாணி அபேசேக்கர கோப்ரல் ரூபசேனவின் மனைவியிடம் கூறியுள்ளார்.

சாணி அபேசேக்கர மற்றும் நிஷாந்த சில்வா இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக சகல ஆவணங்களையும் தயார் செய்துள்ளனர் எனவும், அரசாங்கம் கவிழ்ந்தால் தங்களுக்கு எதிராக சாட்சியங்கள் மேலெழும்பும் என்ற அச்சமே அதற்குக் காரணம் என்றும் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தினார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக