St Our Ceylon News: சாதி குறைந்தவர்கள் தேர் இழுக்கலாகாது என்பதற்காக...
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

திங்கள், 18 ஜூன், 2018

சாதி குறைந்தவர்கள் தேர் இழுக்கலாகாது என்பதற்காக...

வரணி வடக்கு, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய அறங்காவலர் சபையை உடனடியாகக் கூட்டாவிட்டால் கிராமத்தவர்கள் இணைந்து போராடுவார்கள் என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

கிராமத்தவர்கள் சிலர் இணைந்து சிவசேனை அமைப்பின் தலைவர் தலைமையில் நேற்று ஆலய வீதியில் கூடிக் கலந்துரையாடினர். அதன்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத் தேர்த் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. தேரை ஜேசிபி வாகனம் மூலம் இழுத்தமை தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆலய வீதியில் மணல் இருந்ததால் தேர் புதைந்தது என்றும், அதனாலேயே ஜேசிபி வாகனம் மூலம் தேர் இழுக்கப்பட்டது என்றும் ஆலய அறங்காவலர் சபையினர் என்று அடையாளப்படுத்துவோரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்தே நேற்று சிவசேனை அமைப்பின் தலைவர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலர் வாக்களித்ததன்படி அறங்காவலர் சபையை கூட்டி கோயில் நடைமுறையில் திருத்தங்களைக் கொண்டு வராவிடின் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராடத் தீர்மானித்துள்ளார்கள் என்று மறவன்புலோ சச்சிதானந்தம் தெரிவித்தார்.

அதேவேளை, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திடம் 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சிவசேனை அமைப்பால் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.


எனினும் சாதி குறைந்தவர்கள் தேரை இழுத்தலாகாது என்பதற்காகவே இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக