St Our Ceylon News: ஒருசில மாணவர்களின் காமக்களியாட்ட இடமாக வெலிகம கடற்கரை!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 27 ஜனவரி, 2018

ஒருசில மாணவர்களின் காமக்களியாட்ட இடமாக வெலிகம கடற்கரை!

பிள்ளைகளுடன் கடற்கரைக்குச் செல்லும் பெற்றோர் பெரும் விசனம்!

பிரத்தியே வகுப்புக்களுக்குச் செல்வதாகக் கூறிக்கொண்டு, வெளியிடங்களைச் சேர்ந்த  மாணவர்களில் சிலர் காதல்ஜோடிகளாக வெலிகம கடற்கரைக்கு வந்து, அசிங்கமான செயல்களில் ஈடுபடுவதாக கடற்கரைக்கு வந்துசெல்லும் பெற்றோர் பலரும் விசனிக்கின்றனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வார இறுதி நாட்களில் பெற்றோர் தம் பிள்ளைகளை சந்தோசப்படுத்துவதற்காகவும், தாம் உல்லாசமாக காற்று வாங்கி வருவதற்காகவும் கடற்கரைக்கு வருகின்றபோது, பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் புத்தகப்பைகளுடன் காதல் ஜோடிகள், கைகோர்த்து அங்குமிங்கும் சல்லாபிப்பதாகவும், பார்ப்பதற்கு அசிங்கமான முறையில்  தங்களுக்கு முன்பாக முத்தங்கள் பரிமாறிக் கொள்வதாகவும், குடைகளுக்குக் கீழாக அசிங்கமான நடவடிக்கைகளை பகிரங்கமாக எவ்விதப் பயமுமின்றிச் செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும், வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளே கூச்சப்படும் அளவுக்கு அவர்கள் நடந்து கொள்வதாகவும், இவ்வாறு வந்து சல்லாபிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் சிங்கள மொழி மூலமான ரியூசன் வகுப்புக்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்களே என்றும், அவர்கள் ஏழாம் எட்டாம் வகுப்பு மாணவர்களாக இருக்கக்கூடும் எனவும்.. அவ்வளவு சிறிய வயதையுடைய பிஞ்சில் பழுத்துள்ள மாணவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

அழகாக சீர்படுத்தப்பட்டுள்ள வெலிகம கடற்கரை காதல் சங்கம இடமாக மாறினால், அங்கு தாங்கள் போய்வரமுடியாத அவல நிலை இருப்பதனால், வெலிகம பொலிஸார் மற்றும் கடற்கரைப் பாதுகாப்புப் பிரிவினர் 2 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் விசேடமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் தேவைப்பாடான ஒரு விடயம் எனவும் குறிப்பிடுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக