St Our Ceylon News: பல்கலைக்கழக விண்ணப்பங்களை ஏற்கும் காலஎல்லை நீடிப்பு!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 19 ஜனவரி, 2018

பல்கலைக்கழக விண்ணப்பங்களை ஏற்கும் காலஎல்லை நீடிப்பு!

2017 - 2018 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்கும் கால எல்லை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையும் என
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மாணவர்களின் நலன்கருதி ஏழு நாட்களால் கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக நிரப்புவதற்கான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக தகவல்களை 1919 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவியலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக