St Our Ceylon News: ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸாவின் தந்தை காலமானார்!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 9 ஜனவரி, 2018

ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸாவின் தந்தை காலமானார்!

மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஆசிரியருமான ஜெஸ்மி எம். மூஸாவின்  தந்தையான எழுத்தாளரும்,       ஓய்வுபெற்ற ஆசிரியருமான சீனி முஹம்மது மூஸா (74)  நேற்று (8) காலமானார்.

1944 ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்த சீனி முஹம்மது மூஸா, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்று, நாட்டில் நாலா பக்கங்களிலும் ஆசிரிய சேவை செய்தவர்.

இவர், கல்வி மற்றும் சமையல் சார்ந்த மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.

பெரிய நீலாவணை அக்பர் மையவாடியில் இவரது நல்லடக்கம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக