St Our Ceylon News: வடமாகாணத்தில் ஈ.பி.டி.பி. யுடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்து போட்டி..!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

செவ்வாய், 12 டிசம்பர், 2017

வடமாகாணத்தில் ஈ.பி.டி.பி. யுடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்து போட்டி..!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு பல மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன்படி வடமாகணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி)யுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தேர்தல் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதோடுஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில்கூட்டமைப்பின் பொருளாளர் காதர் மஸ்தானை களமிறக்கி பாராளுமன்றத்திற்கு ஓர் உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பினர்.

மேற்படி கூட்டமைப்பின் தலைவரான ஹுனைஸ் பாறூக் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கிய போதும் தீய சக்திகளின் கூட்டு முயற்சியால் அவர் தோற்கடிக்கப்பாட்டார்.
இப்படியான ஓர் அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பெயரைத் திருடி வங்கரோத்தான சில அரசியல் பிரகிருதிகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு கொள்கையில்லாக் ‘கூட்டு’க்கு பெயர்வைக்க தெரியாதவர்கள் எப்படி மக்கள் நலனுக்காக உழைக்கப் போகிறார்கள் என ‘விஷயம்’ தெரிந்த பலரும் வினா எழுப்புகிறார்கள்.
ஈ.பி.டி.பி யைத் தவிர ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு யாரோடும் இணைந்து போட்டியிடவில்லையென கூட்டமைப்பின் செயலாளர் இப்றான்சா பெளருதீன் விடுத்துள்ள ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக