ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆறு பேரை இந்திய உயர் நீதிமன்றம் கடந்த நவம்பரில் விடுதலை செய்தது. அவர்களில் நான்கு பேர் இலங்கையைச்
சேர்ந்தவர்கள்.சாந்தன், ஸ்ரீஹரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு இலங்கையர்களும் கடவுச்சீட்டு அல்லது தொடர்புடைய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பத் தேவையான நடவடிக்கைகள் முடியும் வரை அவர்கள் திருச்சியில் உள்ள வெளிநாட்டினர் தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக