St Our Ceylon News: இனி க.பொ.த சா.த பரீட்சைக்கான பாடங்கள் ஆறு!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 16 மார்ச், 2018

இனி க.பொ.த சா.த பரீட்சைக்கான பாடங்கள் ஆறு!

கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான 9 பாடங்களை 6 பாடங்களாகக் குறைத்து பாடத்திட்டத்தை மறுசீரமைப்பதற்கு, தேசிய கல்வி நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இவ்வாறு பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறினாலும், 13 ஆம் தரம் வரை கல்வி கற்பதற்காக ஆவன செய்யப்படுமென்றும், அதற்காக 26 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இம்முறை க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடையத் தவறினாலும் அவர்களில் எவரும் திசை மாறிச் செல்லமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

நேற்று (15) கல்வியமைச்சில் இடம்பெற்ற  இலங்கை அதிபர் சேவையில் 2 ஆம் வகுப்புக்குக்கு உள்ளீர்க்கப்படுவதற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக