St Our Ceylon News: பிரியங்க பிரனாந்துவை நாடுகடத்துமாறு புலிகள் ஆர்ப்பாட்டம்! (காணொளி இணைப்பு)
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 10 பிப்ரவரி, 2018

பிரியங்க பிரனாந்துவை நாடுகடத்துமாறு புலிகள் ஆர்ப்பாட்டம்! (காணொளி இணைப்பு)

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பிரனாந்துவை அவசரமாக நாடுகடத்துமாறு கூறி, வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்.

சிங்கக் கொடியை நிலத்தில் போட்டு, காலால் மிதித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த சர்வதேச இலங்கை ஆதரவுச் சங்கமொன்றின் உறுப்பினர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து, சிங்கக் கொடியை மேலுயர்த்தி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்துபொலிஸார் உடனடியாக நிலைமை சுமுகம நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக